பங்களதேசத்தில் ரோஹிஞா அகதிகளுக்கு ஒரு தற்காலிக தள மருத்துவமனையை அமைப்பதற்கு 50 லிருந்து 60 க்கும் இடையிலான அதன் பணியாளர்களை அனுப்புவதற்கு சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார்.
பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழு இன்னும் பங்களதேசத்திற்கு அனுப்பப்படவில்லை, ஆனால் அக்குழு புறப்படுவதற்குத் தயாராக இருப்பதாக அமைச்சர் கூறினார்.
பங்களதேசத்தில் அந்த ரிம3.5 மில்லியன் மருத்துவமனையை எங்கு கட்டுவது என்பது பற்றிய பங்களதேசத்தின் ஆலோசனைக்காக அரசாங்கம் இப்போது காத்துக் கொண்டிருக்கிறது என்றாரவர்.