பத்துமலை வளாகத்தில் இன்று நடைபெற்ற மஇகாவின் திறந்த இல்ல தீபாவளி நிகழ்ச்சியில் ‘தந்தை’ நஜிப் ரசாக் கலந்து கொண்டது அந்நிகழ்ச்சியை மேலும் மகிழ்ச்சிகரமானதாக்கியது.
காலை மணி 10.30 பத்துமலை வளாகம் வந்தடைந்த பிரதமர் நஜிப்பை மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் மற்றும் இதர கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.
மேடைக்குச் சென்று அமருமுன்னர், பிரதமர் நஜிப், “நெகாராகு” என்ற கருப்பொருளைக் கொண்ட ஒரு சிறப்பு கோலத்தைச் சென்று கண்டார். பின்னர், பல்லின மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவர் தலைவர்களுக்கான மேடைக்குச் சென்று அமர்ந்தார்.
மத்தளங்கள் முழங்கின. இன்னிசையும் பாரம்பரிய நடனங்களும் இந்நிகழ்ச்சிக்கு மெருகூட்டின. இந்நிகழ்ச்சியில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், போகுவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய், அமைச்சரும் கெராக்கான் தலைவர் மா சியு கியோங், இந்தியா மற்றும் தென் ஆசியாவுக்கான கட்டமைப்பு சிறப்புத் தூதர் ச. சாமிவேலு, துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன், அரசு தலைமைச் செயலாளர் டாக்டர் அலி ஹம்சா ஆகியோர் அங்கிருந்தனர்.
விருந்தாளிகளுக்கு இந்தியப் பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது, அதில் தோசை, கோழி மசாலா மற்றும் பிரியாணியும் அடங்கும்.
தமது வருகையின் இறுதிப் பணியாக நஜிப் தீபாவளி கேக்கை வெட்டினார். அதன் பின்னர், எம்எஐசிசிஐ மற்றும் எச்ஜிஎச்சிசி ஏற்பாடு செய்திருந்த தீபாவளி திறந்த இல்ல நிகழ்ச்சிக்குச் சென்றார்.
ஏய் ! இந்திய சமூகமே ! உமது இளிச்சவாய்த்தனத்திற்கு ஒரு எல்லையே கிடையாதா ? தரங்கெட்டவனுக்குத் தாரத்தையும் இழக்கத் துணிவீர்களா ? பெருநாளில் அசைவம் பாரம்பரிய உணவானதா ? இன்றளவும் தமிழனாகயிருந்து, தமிழையும் தமிழனனின் மாண்பினையும் கடைப்பிடிக்கவைக்கும் அந்த ஆண்டவனுக்கு கோடானுகோடி வந்தனங்கள். தமிழனின் வீரத்தை தரணியெங்கும் எடுத்துச்செல்வோம்.
தைப்பூச வளாகத்தில் அசைவம் கூடாது என்று ஓர் எழுதப்படாத சட்டமே உள்ளது. அந்த சட்டம் இப்போது மட்டும் ஏன் யாருக்காக வளைந்து கொடுக்கிறது? ஓ…ஓ..ஓ…பத்துமலை தான் இப்போது சமய விழாவுக்கான திருத்தலம் அல்லவே…அது சுற்றுலா தலமாகவும், அரசியல் மேடையாகவும் மாறி அரை நூற்றாண்டு ஆயிடுச்சே…வாழ்க தமிழ்க்கடவுள் முருகன்…வாழ்க சைவக் கடவுள்..!
இறுதிப் பணியாக நஜிப் தீபாவளி கேக்கை,
“இந்திய சமுதாயத்தை இந்நாட்டின் நரகாசுரன்”
என எண்ணி வெட்டி சாய்த்து விட்டார்
இனி இந்திய சமுதாயத்திற்கு எவ்வித பிரச்னையும் கிடையாது,
அதேபோல் BN-க்கும் இந்திய சமுதாயத்தால் எவ்வித பிரச்னையும் கிடையாது.