நான்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பக்கத்தான் ஹரபான், கெடாவுக்கான அதன் தலைமைத்துவ வரிசையை நேற்றிரவு அறிவித்தது.
பக்கத்தான் ஹரபான் தலைவரும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பிபிபிஎம்) அவைத் தலைவருமான டாக்டர் மகாதிர் முகம்மட் “மலேசியாவைக் காப்போம் பேரணி மற்றும் விருந்து” நிகழ்வில் அந்த அறிவிப்பைச் செய்தார்.
கெடா பக்கத்தான் ஹரபான் தலைவராக அவரின் மகன் முக்ரிஸ் மகாதிர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பிகேஆரின் கோலா கெடா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அஸ்மான் இஸ்மாயில், கெடா அமனா அவைத்தலைவர் டாக்டர் இஸ்மாயில் சாலே, கெடா டிஏபி அவைத்தலைவர் ஆகியோர் துணைத் தலைவர்கள்.