பினாங்கு அரசு தஞ்சோங் பூங்கா கட்டுபடி-விலை வீடமைப்புத் திட்டத்தைக் கண்காணிக்கத் தவறிவிட்டதாக இயற்கை வள, சுற்றுசூழல் அமைச்சு கூறியது. அந்த வீடமைப்புத் திட்டத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பதினொரு பேர் பலியானார்கள்.
அந்த வீடமைப்புத் திட்டத்தின் மேம்பாட்டாளரான தாமான் ஸ்ரீபூங்கா சென். பெர்ஹாட் அனுமதியின்றியே அத்திட்டத்தை மேற்கொண்டிருந்ததாக அமைச்சு கூறிற்று.
அந்நிறுவனம் அனுமதி கேட்டு சுற்றுச்சூழல் துறைக்கு செய்திருந்த விண்ணப்பம், வீடமைப்புத் திட்டத்துக்கு அருகிலேயே கல்லுடைப்புப் பகுதி இருந்ததால் நிராகரிக்கப்பட்டது. அத்திட்டத்தை நிராகரிக்கும் கடிதம் 2015, ஜனவரி 23-இல் அந்நிறுவனத்துக்கு கொடுக்கபட்டது.
டெய்க் கிரேனைட் குவாரி நிறுவனம் 1960-இலிருந்தே அங்குள்ள மலைப்பகுதியில் கல்லுடைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அனுமதி இல்லாமல் எப்படி வீடமைப்பு திட்டம் செயல் பட்டது? அனுமதியும் மறுக்கப்பட்டதாக செய்தி– என்ன தான் நடக்கிறது? இந்தியாவில் நடப்பது போல் அல்லவா இருக்கிறது?