பிஎன் தேர்தல் இயந்திரத்தின் 14வது பொதுத் தேர்தலுக்கான விளக்கமளிப்பு அநியாயத்துக்கு “அம்னோவுக்குச் சாதகமாக இருந்தது” என பார்டி ரக்யாட் சரவாக் (பிஆர்எஸ்) தலைவர் ஜேம்ஸ் மாசிங் குறைப்பட்டுக்கொண்டார்.
கடந்த சனிக்கிழமை பிஎன் தலைமையகம் அமைந்துள்ள மினாரா டத்தோ ஒன்னில் நடைபெற்ற அக்கூட்டத்தில் பிஎன்னின் உறுப்புக் கட்சிகள் ஒவ்வொன்றிலிருந்தும் பத்துப் பேர் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டது.
அக்கூட்டத்துக்குப் பின்னர் போர்னியோ போஸ்ட் ஆன்லைனிடம் பேசிய மாசிங், தம்முடைய அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டார்.
“14வது பொதுத் தேர்தலுக்கான தேர்தல் இயந்திரம் குறித்து அம்னோ அதிகாரிகளே பேசினார்கள்………நிகழ்வு மொத்தமும் அம்னோ சார்புடையதாகவே இருந்தது.
“அங்கிருந்த படங்கள்கூட அம்னோ தலைவர்களின் படங்கள்தான். (பிஎன்)உறுப்புக்கட்சித் தலைவர்களின் படங்கள் ஒன்றுகூட இல்லை. நாங்கள் எல்லாரும் வெறும் அலங்காரப் பொம்மைகள்தான் போலிருக்கிறது”, என்று மாசிங் கூறினார்.