நிலச் சரிவுமீது போலீஸ் புகார்

பினாங்கில்  11  பேரைக்  காவு   கொண்ட   நிலச்   சரிவு    குறித்து    போலீசில்   புகார்    செய்யப்பட்டுள்ளது.

நிலச்    சரிவுச்  சம்பவத்தில்   “நிபுணத்துவக்  கவனக்குறைவு”   நிகழ்ந்துள்ளதா     என்பதைக்   கண்டறியவே   போலீஸ்   புகார்   என   மாநில    ஆட்சிக்குழு    உறுப்பினர்    செள   கொன்  இயு   கூறினார்.

போலீஸ்   புகார்     செய்யுமாறு   பினாங்கு    தீவு    மாநகராட்சி    மன்றத்துக்கும்  போலீஸ்   விசாரணைக்கு   ஒத்துழைக்குமாறு       அரசுத்துறைகளுக்கும்    மாநில   அரசு  உத்தரவு    பிறப்பித்திருப்பதாக    செள    தெரிவித்தார்.

“இது  குற்றமிழைத்தவரைக்  கண்டுபிடித்து     அவர்மீது   குற்றம்சாட்ட   வழிவகுக்கும்”,  என்றாரவர்.