ஷாபியின் முன்னாள் செயலாளர்கள் பிணையில் விடுதலை

சாபாவின்  கிராமப்புற     மேம்பாட்டுக்காகக்  கொடுக்கப்பட்ட     ரிம1.5  பில்லியன்   நிதியில்   நிகழ்ந்ததாகக்  கூறப்படும்    முறைகேடுகள்  தொடர்பில்   தடுத்து   வைக்கப்பட்டிருந்த     முன்னாள்  கூட்டரசு   அமைச்சரான   முகம்மட்   ஷாபி    அப்டாலின்   முன்னாள்  செயலாளர்கள்  இருவரை    புத்ரா  ஜெயா   மெஜிஸ்திரேட்    நீதிமன்றம்   இன்று   விடுவித்தது.

இருவரையும்   ரிம 15,000  பிணையிலும்   ஒருவரின்   உத்தரவாதத்தின்     பேரிலும்    மெஜிஸ்திரேட்   நிக்    முய்ஸுடின்   நிக்   முகம்மட்   விடுவித்தார்.

அவ்விருவரும்  2009-க்கும்  2015க்குமிடையில்   சாபா   அமைச்சுக்கு   ஒதுக்கப்பட்ட     மேம்பாட்டு    நிதிகளில்    நிகழ்ந்ததாகக்   கூறப்படும்   முறைகேடுகள்   தொடர்பான    விசாரணைக்கு    உதவியாக   அக்டோபர்   20-இல்  தடுத்து   வைக்கப்பட்டனர்.

அவ்விவகாரம்    தொடர்பில்   எம்ஏசிசி,    செம்போர்னா   எம்பி    ஆன    ஷாபி  உள்பட   13பேரை  விசாரணைக்காக   தடுத்து  வைத்துள்ளது.

பெர்னாமா