அட்டர்னி ஜெனரல் : கருத்து ஏதும் இல்லை

அரசு தரப்பு துணை வழக்கறிஞர் கெவின் மொரைசிடமிருந்து, பிரதமர் நஜிப் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்கு வரைவை பெற்றதாக சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரெவ்கேல்-பிரவுனின் கூற்றுக்குக் கருத்துரைக்க அட்டர்னி ஜெனரல் மறுத்துவிட்டார்.

இன்று மதியம் தொடர்பு கொண்டபோது, முகமது அபாண்டி அலி,  “எனக்கு எந்த கருத்துகளும் இல்லை,” என்று பதிலளித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சரவாக் ரிப்போர்டின் அக்குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அபாண்டி மறுத்தார்.

கடந்த அக்டோபர் 11-ல், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், யுகேயில் கிளேருக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில், தற்காப்பு வாதத்தை தாக்கல் செய்த அறிக்கையில் கிளேர் இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

ஜூலை 27, 2015-ல், சுகாதார காரணங்களுக்காக, முன்னாள் அட்டர்னி ஜெனரல் அப்துல் கனி பட்டேல் , பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

1எம்டிபி ஊழல் மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகளை மூடிமறைக்கும் முயற்சியில் கனி பதவி நீக்கம் செய்யப்பட்டார் எனும் குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்தது.