தொழிலாளர்களுக்கு மன அழுத்தம் – காரணமான முதலாளிகள் மீது நடவடிக்கை

மனிதவள துணை அமைச்சர், இஸ்மாயில் அப்துல் முத்தலிப், தனது தரப்பு இந்த விஷயத்தை சகித்துக் கொள்ளலாது என்று கூறியதோடு; ஊழியர்களை மதிக்காத முதலாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது உட்பட விசாரணைகளை நடத்தும் என்றும் வலியுறுத்தினார்.

“தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினையை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம், பிரச்சினைகள் காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டால், அமைச்சகத்தில் தெரிவிக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

“தொழிலாளர்களிடம் நன்றி பாராட்டத் தெரியாத முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம், இதில் முதலாளிகளுக்கு சேவையாற்றி, அவர்களின் மேம்பாட்டிற்கு பங்களித்த தொழிலாளர்களை, முதலாளிகள் சித்ரவதை செய்தால், அதனை நிச்சயம் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் கூறினார்.

நேற்று, நாடாளுமன்றத்தில் கேள்வி-பதில் நேரத்தின் போது, கோலா லங்காட் எம்.பி. அப்துல்லா சானியின் கேள்விக்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார்.