வெளியில் கசிந்த எம்ஏசிசி சாட்சி அறிக்கைகள்மீதான விசாரணை நடத்தும் பொறுப்பை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் எடுத்துக்கொண்டிருக்கிறது.
அந்தச் சாட்சி அறிக்கைகள் ஜோகூர் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்(எக்ஸ்கோ) அப்துல் லத்திப் பண்டி சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பானவை. அவை இரகசிய ஆவணங்களாகும்.
இவ்விவகாரம் தொடர்பில் நவம்பர் 29வரை மூன்று புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் முகம்மட் காலில் காடர் முகம்மட் தெரிவித்தார்.
“இரண்டு புகார்கள் ஸ்ரீஆலம் போலீஸ் மாவட்ட தலைமையகத்திலும் இன்னொன்று ஜோகூர் பாரு செலாத்தான் போலீஸ் மாவட்டத் தலைமையகத்திலும் செய்யப்பட்டன.
“இவற்றின்மீது மேல்விசாரணை செய்யும் பொறுப்பை இப்போது புக்கிட் அமான் எடுத்துக்கொண்டுள்ளது”, என காலில் கூறினார்.