அம்னோ உறுப்பினர் ஒவ்வொருவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோவும் பாரிசான் நேசனலும் (பிஎன்) சிறந்த வெற்றி பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அஹம்ட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.
அதற்காக அம்னோ அதன் வலிவாற்றலையும் போட்டியிடும் தன்மையையும் போராட்ட உணர்வையும் தொடர்ந்து நிலைநிறுத்தி வரவேண்டும் என அம்னோ துணைத்தலைவரின் பொறுப்புகளை மேற்கொண்டுள்ள அம்னோ உதவித் தலைவரான ஹமிடி கேட்டுக்கொண்டார்.
கட்சியிலும் தலைமைத்துவத்திலும் இந்த உணர்வுகள் நிறைந்திருக்குமானால் எப்படிப்பட்ட சோதனைகளையும் சவால்களையும் எதிர்நோக்கினாலும் அம்னோ தொடந்து வலுவுடன் விளங்கும் என்றாரவர்.