14 ஆவது பொதுத் தேர்தலில் ஜொகூர் மாநிலத்தில் போட்டியிடுவதற்கு ஒரு இருக்கையை கொடுப்பது பற்றி ஜொகூர் பாரிசான் நேசனல் ஆலோசிக்க வேண்டும் என்று மைபிபிபி வலியுறுத்தியுள்ளது.
மத்திய மற்றும் மாநில பாரிசானுக்கு மைபிபிபி ஆதரவு அளித்துள்ளதோடு விசுவாசமாகவும் இருந்து வந்துள்ளது என்று கூறிய அக்கட்சியின் தலைவர் எம். கேவியஸ், அக்கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறினார்.
“ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் 56 இருக்கைகள் இருக்கின்றன. நாங்கள் அதிகமாகக் கேட்கவில்லை, மைபிபிபி ஒரே ஒரு இருக்கையை மட்டும் கேட்கிறது.
“மைபிபிபி உறுதியான விசுவாசத்தைக் காட்டியுள்ளது. அதை கேள்விக்குள்ளாக்க முடியாது.
“மைபிபிபிக்கான மத்திய மற்றும் மாநில பாரிசானின் விசுவாசத்தை நாங்கள் சோதிக்க விரும்புகிறோம், அதற்கான நேரம் வந்துவிட்டது”, என்று மைபிபிபி 2017 மாநாட்டை இங்கு இன்று திறந்து வைத்து உரையாற்றுகையில் கேவியஸ் கூறினார்.
1,100 பேராளர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டை ஜொகூர் பிஎன் துணைத் தலைவர் அப்துல் லத்திப் அஹமட் திறந்து வைத்தார்.
siiddukke kaiyenthum poluthu ooddukku eppadi ?