ஒவ்வொவொரு அம்னோ மாநாட்டிலும் ‘கல்வாத்’ ஏராளம், முன்னாள் புத்ரி அம்னோ கூறுகிறார்

 

அம்னோ ஆண்டு பேரவை தொடங்கி விட்டால், அங்கே கல்வாத் மயம்தான் என்று கிள்ளான் அம்னோ புத்ரி குழுவின் முன்னாள் உறுப்பினர் வான் அஸீமா கமாருடின் கூறிக்கொண்டார்.

இப்போது பாஸ் கட்சியின் உறுப்பினரான அஸீமா, இது தான் அம்னோவிலிருந்த 17 ஆண்டுகால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றார்.

கல்வாத்தில் ஈடுபட்டிருப்பவர்களைக் கைது செய்வதற்கு ஒரு பெரும் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அஸீமா கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய இலாகாவுக்கு (ஜாவி) சவால் விட்டார்.

எத்தனை பேர் கல்வாத்தில் ஈடுபடுகிறார்கள், எத்தனை முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களுடன் கல்வாத் புரிகின்றனர் என்று அவர் கூறியதாக ஹராக்கா டெய்லி இன்று கூறுகிறது.

அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் இம்மாதியான நல்லொழுக்கமற்ற செயல்கள் நடப்பதற்கு தாம் ஆதரவாக இருக்க விரும்பவில்லை என்றாரவர்.

“அங்கே பார்க்கலாம், மற்றவர்களின் மனைவிமார்கள் எத்தனை பேர், மற்றவர்களின் கணவன்மார்கள்  எத்தனை பேர், எல்லாரும் ஒரே அறையில்.

“நான் இதைப்பற்றி ஏதாவது கூறினால், நான் அவதூறு கூறுகிறேன், வெட்கக்கேடானவள் என்று அவர்கள் கூறுவார்கள், ஆனால், நான் அங்கிருந்த 17 ஆண்டுகளில் இந்த நல்லொழுக்கமற்ற செயல்களை எல்லாம் பார்த்திருக்கிறேன்.

“நான் இதுபோன்ற செயல்களுக்கு ஆதரவு அளிக்கவே மாட்டேன், என்று அஸீமா கூறினார்.

ஆகவே, ஜாவி கோலாலம்பூரிலுள்ள தங்கும்விடுதிகள் எல்லாவற்றிலும் டிசம்பர் 5 லிருந்து 9 வரையில் நடக்கும் அம்னோ மாநாட்டின் போது திடீர் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

நவம்பரில் பாஸ் கட்சியில் சேர்வதற்காக அஸீமா அம்னோவிலிருந்து விலகிய போது அவருக்கு ரிம1.5 மில்லியன் திட்டம் கொடுக்க முன்வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.