புத்ராஜெயா கைமாற விடமாட்டோம், ஸாகிட் சூழுரைக்கிறார்

 

அம்னோவின் துணைத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி புத்ராஜெயா கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று துணிச்சலான பிரகடனம் ஒன்றை செய்துள்ளார்.

நாங்கள் ஓரடிகூட பின்வாங்க மாட்டோம். அம்னோவை தோற்கடிக்க முடியாது! பிஎன்னை தோற்கடிக்க முடியாது! புத்ராஜெயா கைமாற விடமாட்டோம் என்றாரவர்.

புத்ராஜெயா தொடர்ந்து நமது கையில் இருக்கும், அம்னோவுக்கும் பிஎன்னுக்கும் சொந்தமாயிருக்கும் என்று கோலாலம்பூர் புத்ரா உலக வாணிக மையத்தில் இன்றிரவு பேசுகையில் ஸாகிட் கூறினார்.