இவ்வாண்டு கல்வி அமைச்சு நாட்டில் உள்ள தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளைத் தரமுயர்த்தவும் பராமரிக்கவும் ரிம50 மில்லியனை ஒதுக்கியதாகக் கல்வி அமைச்சர் மகாட்சிர் காலிட் கூறினார்.
இது தவிர தமிழ்ப் பள்ளிகளில் பள்ளிகளுக்கு- முந்திய 50 வகுப்பறைகளைக் கட்டுவதற்கு ரிம10 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது என்றாரவர்.
“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான அரசாங்கம் இந்திய சமூகத்தின் கல்வியில் அக்கறை கொண்டிருக்கிறது. அந்த அக்கறை நாட்டிலுள்ள 524 தமிழ்ப்பள்ளிகளையும் பராமரிப்பதற்கு ஒதுக்கப்படும் மிகப் பெரிய ஒதுக்கீடுகளில் பிரதிபலிக்கிறது.
“இப்பள்ளிகளைப் புதுப்பிக்கவும் தரம் உயர்த்தவும் 2009-இலிருந்தே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. 300 பள்ளிகளில் அப்பணிகளுக்காக 2015-இலும் 2016-இலும் ரிம66.5 மில்லியனை அமைச்சு ஒதுக்கியது”, என மகாட்சிர் கூறினார். லாடாங் லஞ்சாங் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடத்தை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அந்நிகழ்வில் கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன், லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினரும் பகாங் சுற்றுலா, கலாச்சார விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினருமான முகம்மட் ஷர்க்கார் ஷம்சுதீன் முதலானோரும் கலந்து கொண்டனர்.
RM50 மில்லியன் ஒதுக்கியதற்கு நன்றி; இந்த ஒதுக்கீடும் இப்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில்தான் கொடுக்கின்றீர்கள்..ஒருவேளை தேர்தலே வரவில்லையென்றால் இதுக் கூடக் கிடைக்குமா? இதைவிட மிக முக்கியம் இன்று சிலத் தமிழ்ப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள இரட்டைமொழிப் பாடத் திட்டதை உடனே மாற்றுங்கள்? தமிழ்ப் பள்ளிகள் தமிழ்ப் பள்ளிகளாவே இயங்க வேண்டும். இதையும் வரும் தேர்தலுக்கு முன் அறிவித்து விட்டால் மக்கள் வரவேற்ப்பார்கள். மக்களின் ஆதரவும் உங்களுக்கு நிச்சயம் கிட்டும்!. தமிழ்ப் பள்ளிகளில் தேசிய மொழி ஆங்கிலம் போன்றப் பாடங்களின் தரத்தை உயர்த்துங்கள். இதுதான் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கான நல்ல அணுகு முறை!
இன்னும் கூடுதலாகவே ஒதுக்கி இருக்கலாம்! காரணம் இந்த ஒதுக்கிடு வருகிற தேர்தலுக்கு! அடுத்த ஒதுக்கீடு இன்னும் அடுத்தப் பொதுத் தேர்தலுக்குத் தான் வரும்! இடைப்பட்ட காலத்தில் … ஒன்றும் இருக்காதே!
நம்பிக்கை நாயகனின் விளையாட்டு. தேர்தல் இனிப்பு.அவ்வளவுதான்.