மகாதிர் நாட்டை அழித்து விடுவார், பாஸ் இளைஞர் உதவித் தலைவர் எச்சரிக்கிறார்

 

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் நாட்டை ஆள்வதற்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டால், அவர் நாட்டை அழித்து விடுவார் என்று பாஸ் கட்சியின் இளைஞர் உதவித் தலைவர் அஹமட் பாதிலி ஷஆரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்தச் சூழலில், மகாதிர் காலத்து சம்பவங்கள், மெமாலி சம்பவம், மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட அரசமைப்பு நெருக்கடி மற்றும் அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது போன்றவை, மீண்டும் ஏற்படக்கூடிய ஆபத்து உண்டு என்றாரவர்.

மகாதிரை மீண்டும் நம்ப வேண்டும் என்பதற்கான பொருத்தத்தை தம்மால் காண முடியவில்லை என்று கூறிய அஹமட், அவர் திரும்பி வந்து நாட்டை அழித்து விடுவார் என்றார்.

உண்மையில், அவர் பிரதமராக ஆட்சி புரிந்த காலத்தில் விளைந்த பல “வியாதிகளை” சுத்தப்படுத்த நாம் முயன்று கொண்டிருக்கிறோம்.

இதன் காரணமாக, மலேசியர்கள் மகாதிரை நிராகரிக்க வேண்டும். மாறாக பாஸ் கட்சியை, முதிர்ச்சியடைந்த அரசியலைப் பின்பற்றும் கட்சி, அவர்கள் ஆதரிக்க வேண்டும் என்றாரவர்.