கடந்த காலத் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டார் மகாதிர்: ‘நானும் மனிதன்தானே’

முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்    தம்   அரசியல்  வாழ்க்கையில்   இழைத்த     தவறுகளுக்கு   மன்னிப்பு   கேட்டார்.

இன்று   பெர்சத்து   கட்சியின்   முதலாவது    ஆண்டுக்   கூட்டத்தைத்   தொடக்கி  வைத்து   உரையாற்றிய    அவர்,  தாமும்  மனிதன்தான்   என்றும்  தவறு    செய்வதைத்   தவிர்க்க  இயலாது  என்றும்   குறிப்பிட்டார்.

“என்  உரையை   முடிக்குமுன்னர்   நான்   தவறாக   பேசியிருந்தால்,  எவருடைய  மனத்தையும்   நோகடித்திருந்தால்   மன்னிக்குமாறு   கேட்டுக்கொள்கிறேன்”,  என்றார்.

“மற்ற  மனிதர்களைப்  போலவே   நானும்   தவறு  செய்திருக்கலாம்.  இன்று  மட்டுமல்ல,   என்  அரசியல்   வாழ்க்கை   நெடுகிலும்.

“அதற்காக  மன்னிப்பு   கோருகிறேன்”,  என  அந்த  92-வயது   பெர்சத்து   தலைவர்   கூறினார்.

ஆனால்,  என்ன   தவறு   செய்தார்   என்பதை   அவர்  விவரிக்கவே  இல்லை.

பின்னர்   செய்தியாளர்களிடம்   பேசியவரிடம்   அவரது   ஆட்சியில்  துணைப்  பிரதமராக   இருந்த   அன்வார்   இப்ராகிம்மீது   குதப்புணர்ச்சிக்  குற்றம்  சாட்டிச்  சிறைக்குள்   தள்ளியதற்கும்   சேர்த்துத்தான்   மன்னிப்பு   கேட்டாரா   என்று  வினவப்பட்டது.  அதற்கு    மகாதிர், “அதை  எப்படி   வேண்டுமானாலும்   அர்த்தப்படுத்திக்  கொள்ளுங்கள்”,  என்றார்