ஹரப்பானின் இடைக்கால பிரதமர் வேட்பாளர் தேர்வில் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது ஏதும் இல்லை, வழக்குரைஞர் கூறுகிறார்

 

பெர்சத்துவின் தலைவர் மகாதிர் முகமட் இடைக்கால பிரதமர் வேட்பாளராக ஹரப்பான் செய்துள்ள முன்மொழிதலில் ‘அரசமைப்புக்கு முரணானது எதுவும் இல்லை’ என்று மகாதிரின் வழக்குரைஞர் ஹனிப் காதிரி அப்துல்லா இன்று கூறினார்.

அம்முன்மொழிவு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று நேற்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறியிருந்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய ஹனிப், இம்மாதிரியான வழக்கமான செயலை எந்தக் கட்சியும் மேற்கொள்வதைத் தெள்ளத்தெளிவாகத் தடைசெய்யும் விதிகள் அரசமைப்பில் இல்லை என்றார்.

தாக்கியுடின் ஹசான் கூறியிருப்பது தவறான வியாக்கியானம் ஏனென்றால் ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னால் எந்த ஒரு கட்சியும் ஓர் இடைக்கால பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதைத் தடைசெய்யும் விதிகள் எதுவும் அரசமைப்புச் சட்டத்தில் இல்லை என்று தாம் கூறுவதாக ஹனிப் தெரிவித்தார்.