சுமார் 3,000 பேர் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

அக்டோபர்  9 முடிய  2787பேர்  முறையாக    குற்றம்  சாட்டப்படாமல்   பல்வேறு  குற்றங்களுக்காகத்  தடுத்து  வைக்கப்பட்டிருப்பதாக   சிறைத்துறை   ஆவணங்கள்   கூறுகின்றன.

அவர்களில்  600பேர்  குற்றச்செயல்  தடுப்புச்   சட்ட(பொகா) த்தின்கீழும்,

18பேர்  2015 பயங்கரவாதச்   சட்டத்தின்கீழும்,

1,829பேர் போதைமருந்துச்   சட்டத்தின்கீழும்,

340பேர் 2012 பாதுகாப்புக்  குற்ற(சிறப்பு   நடவடிக்கை)ச் சட்டத்தின்கீழும்  தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர்.

உள்துறை    அமைச்சு   செலாயாங்   எம்பி   வில்லியம்  லியோங்குக்கு    நாடாளுமன்றத்தில்  அளித்த   பதிலில்   இந்தத்   தகவல்   அடங்கியுள்ளது.

லியோங்  எந்தெந்த  தடுப்பு  மையங்கள்   எத்தனை  பேர்  தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர்   என்பதையும்   தெரிந்து  கொள்ள   விரும்பினார். ஆனால்,  அதற்கு  அமைச்சு  பதிலளிக்கவில்லை.