ஜொகூர் பெர்சே 2.0 : ஜொகூர் மாநிலத்தில் தூய்மையான நீதியான தேர்தல் வேண்டும்

தூய்மையான நீதியான தேர்தலை மலேசியாவில் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பல சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் பெர்சே 2.0 கூட்டமைப்பில் ஒன்றிணைந்தன. இக்கூட்டமைப்பில் இடம்பெற்ற அமைப்புகளில் சில, தங்கள் இலக்கான 8 கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர்ந்து பட்டறைகள், கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன.

‘8 கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், பிறகே பொதுத்தேர்தல் 13’ என்ற தனது புதிய பிரச்சாரத்தைப் பெர்சே 2.0 கடந்த செப்டம்பர் 30, 2011-ன்றில் கோலாலம்பூரில் துவக்கியது. அரசாங்கம், குறிப்பாக, தேர்தல் ஆணையம் 13-வது பொதுத் தேர்தலுக்கு முன் தேர்தல் சீரமைப்பை அமல்படுத்த வேண்டும். இதை நினைவுறுத்துவதே இப்பிரச்சார இயக்கத்தின் நோக்கம்.

ஜொகூர் மாநிலத்தில் இயங்கும் அரசு சாரா அமைப்புகளான சுவாராம் நட்பு நடவடிக்கைக் குழு, செம்பருத்தி தோழர்கள், இக்ராம், பி.யு.எம். மற்றும் எல்.எல்.ஜி. போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து, ஜொகூர் பெர்சே 2.0 நடவடிக்கை குழு அமைத்தமைக்கு, பெர்சே 2.0 தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறது.

மேலும், அதிகமான பொது அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் பெர்சே 2.0-ன் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்க இந்த ‘கட்சி சாரா ஒருங்கிணைப்பு குழு’வில் இணைந்து தூய்மையான நீதியான தேர்தலுக்கு குரல் எழுப்ப முன்வர வேண்டும் என்று பெர்சே 2.0 கேட்டுக்கொள்கிறது.

ஜொகூர் பெர்சே 2.0 இரண்டு நிகழ்வுகளைக் கீழ்க்கண்டவாறு ஏற்பாடு செய்துள்ளது:-

1. தேர்தல் சீரமைப்பு பட்டறை
தேதி : டிசம்பர் 3, 2011
நேரம் : மதியம் 2 – மாலை 6
இடம் : 11@சென்ச்சூரி தங்கும் விடுதி (11@Century Hotel)
நுழைவு இலவசம். ஆனால், முன்பதிவு செய்ய வேண்டும்.
தொடர்புக்கு : பாங் பெய் பென் 016 7782707

2. பிரச்சாரத் தொடக்கவிழா ‘8 கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், பிறகே பொதுத்தேர்தல் 13’
தேதி : டிசம்பர் 3, 2011
நேரம் : இரவு 8 – 11.30
இடம் : 11@சென்ச்சூரி தங்கும் விடுதி (11@Century Hotel)

பெர்சே 2.0 மற்றும் ஜொகூர் பெர்சே 2.0, அனைவரும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து, ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறது.

மேல் விவரங்களுக்கு :- பாங் பெய் பென் 016 7782707 அல்லது மின்னஞ்சல் [email protected]