ஃபெல்டா நிலம் குறித்த ரஃபிஸியின் ஆவணங்கள் நாளை வெளியிடப்படும்

கோலாலம்பூர், ஜாலான் செமாராக்கில் உள்ள தனது நிலம், திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்று ஃபெல்டா அறிவித்த ஒரு வாரத்திற்குப் பின்னர், இன்று பிகேஆர் வேறுவிதமாக விவாதிக்கத் தொடங்கியுள்ளது.

“என்னிடம் சில ஆவணங்கள் உள்ளன, அந்த நிலத்தை ஃபெல்டா நிரந்தரமாக இழந்துவிட்டது என்ற என் வாதத்தை மேலும் உறுதிபடுத்த, அவற்றை நான் நாளையும் நாளை மறுநாளும் வெளியிட உள்ளேன்,” என்று பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிசி ரம்லி கூறியுள்ளார்.

ஜனவரி 15-ம் தேதி, ஃபெல்டா தலைவரான ஷஹ்ரிர் சமாட், எந்தவொரு பரிவர்த்தனைக் கட்டணமுமின்றி, RM200 மில்லியன் மதிப்புள்ள நிலத்தை ஃபெல்டா மீண்டும் பெற்றது என்று அறிவித்தார்.

நில உரிமை மாற்றப்பட்டாலும், அந்நிலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கோலாலம்பூர் வெட்டிக்கல் சிட்டி திட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.

அந்நிலம் திரும்பப் பெறப்பட்டது என்பது வெறும் அரசியல் நாடகம் என்று ரஃபிசி கூறினார்.

இன்று ஓர் அறிக்கையில், அந்த நில உரிமை தொடர்பில் வாதிட, ரஃபிசி ஷஹ்ரிருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.