போலிடிவிட்: நேரடிப் போட்டி என்றால் ஜோகூரில் ஹரபான் வெல்லும்

எதிர்வரும்    பொதுத்    தேர்தலில்   ஜோகூரில்  பக்கத்தான்  ஹரபான்  வெல்லும்   என்று  ஆருடம்   கூறும்   சமூக  வலைத்தள   ஆய்வு  மையமான  போலிடிவிட்,   பிஎன்னுடன்  நேரடிப்  போட்டி    நடந்தால்   மட்டுமே    அது   சாத்தியம்  என்கிறது.

அம்மாநிலச்  சட்டமன்றத்தில்   56  இடங்கள்  உள்ளன.  அவற்றில்   36  இடங்களில்   அது   வெல்ல   வேண்டும்.

மும்முனைப்  போட்டி   என்றால்   அது  பிஎன்னுக்கே   சாதகமாக   அமையும்.  அதையும்  மீறி   வெல்ல    வேண்டுமானால்   ஹரபான்   பிஎன்   ஆதரவாளர்களைத்   தன்  பக்கம்   இழுக்க    வேண்டும்.  அது   “எளிதல்ல”  என்று  போலிடிவிட்   கூறிற்று.

மற்ற   மாநிலங்கள்போல்    அல்லாமல்,  ஜோகூரில்  மலாய்    வாக்காளர்கள்,  குறிப்பாக  30வயதுக்குக்  கீழ்ப்பட்டவர்களில்   பெரும்பாலோர்   அம்னோ   ஆதரவாளர்களாக    இருப்பதுதான்   இதற்குக்  காரணம்.