பிகேஆர்: ஷாரிசாட் கணவர் உம்ராவுக்கு என்எப்சி பணத்தைப் பயன்படுத்தினார்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு(என்எப்சி) அரசாங்கம் எளிய நிபந்தனைகளிம் வழங்கிய ரிம250மில்லியன் ரிங்கிட் மேலும் சில விசயங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை பிகேஆர் இன்று அம்பலப்படுத்தியது.

பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், என்எப்சி அதன் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) முகம்மட் சாலே இஸ்மாயிலும் அவரின் மகன் வான் ஷாகினூர் இஸ்ரானும் உம்ரா செய்வதற்கு ரிம31,580 செலவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

என்எப்சியின் பணம்,முகம்மட் சாலே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சென்றிருப்பதாக சைபுடின் குற்றம் சாட்டினார்.

முகம்மட் சாலே,  மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலிலின் கணவராவார்.

ஹஜ்ஜு யாத்திரைக்கான செலவுத் தொகையைக் கொடுக்குமாறு கூறும் உத்தரவு முகம்மட் சாலே அலுவலகத்திலிருந்து வந்தது என்பதற்குத் தகுந்த ஆதாரம் இருப்பதாக சைபுடின் கூறினார்.

 “அதன் பணம், குளோபல் பயோபுயூச்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் மீட்வோர்க்ஸ் சிங்கப்பூர் நிறுவனமும் அமைக்கப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கிறது.”

இவற்றையெல்லாம் போலீசும் நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவும் விசாரிக்க வேண்டும் என்று சைபுடின் வலியுறுத்தினார்.

TAGS: