இன்று லங்காவியில் சுமார் 1,000 இந்தியர்கள் கலந்துகொண்ட ஒரு “தே தாரிக் நிகழ்ச்சியில்” பேசிய பிரதமர் நஜிப் ரசாக் இம்மாதக் கடைசியில் பி40 வகையைச் சேர்ந்த இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு அமனா சஹாம் 1மலேசியா (எஎஸ்1எம்) ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
இதை அறிவித்த பிரதமர் மொத்தம் ரிம500 மில்லியன் இதற்காக ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.
இந்தியச் சமூகத்தை சேர்ந்த அதிகமானவர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருவருக்கு 5,000 பங்குகள் மட்டுமே கொடுக்கப்படும் என்றாரவர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 27இல், 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது இந்தியச் சமூகத்திற்கு உதவுவதற்காக 1.5 மில்லியன் அமனா சஹாம்1எம் கூடுதல் பங்குகள் வெளியிடப்படும் என்றும் அதில் முதலீடு செய்யும் ஒருவருக்கு 30,000 பங்குகள் மட்டுமே கொடுக்கப்படும் என்ற கட்டுப்பாட்டையும் நஜிப் அறிவித்தார்.
அப்பங்குகளின் விநியோகம் ஜனவரி 29இல் தொடங்கியது.
மேலும், பி40 வகையச் சேர்ந்த 100,000 இந்தியக் குடும்பங்கள் இத்திட்டத்தில் பங்கேற்க கடன் பெறுவதற்கு சிறப்பு கடன் முதலீட்டு திட்டத்திற்கு ரிம500 மில்லியனையும் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டமானது இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பல இதர திட்டங்களில் ஒரு பகுதி மட்டுமே ஆகும் என்று நஜிப் மேலும் கூறினார்.
தேர்தல் வந்தால் மட்டும் உடனே இந்திய மக்களின் ஞாபகம் அடிக்கடி இந்த ஆட்சியாளர்களுக்கு வருகின்றது. ஆனால் மற்ற நாட்களில் – எவ்வளவோ சொல்ல வேண்டியுள்ளது. அதிலொன்று வங்க தேச இளைஞர் எப்படி எந்த நோக்கத்திற்காக இங்கு வந்தார்கள்; இன்று அவர்கள் வியாபாரம் செய்யும் அளவிற்கு இங்கு வளர்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்; எங்களால் மட்டும் முடியவில்லையே! ஏனென்றுப் புரியவில்லை. நாங்கள் இந்த நாட்டு சொந்த மக்கள்; தயவுச் செய்து எங்களிடம் கொஞ்சம் கருணைக் காட்டுங்கள்!
தேர்தல் இனிப்புகள்!
இது ஒரு அருமையான திட்டம்மாயினும் எத்தனை இந்தியர்கள் பயன் அடைவார்கள் என்பதை முதலில் கவனிக்க பட வேண்டும். இந்த நல்ல திட்டதை (இந்து) அரசியல் கட்சிகளிடம் கொடுக்காமல் அரசாங்கம் நேரடியாக இந்த திடத்தில் பங்கு எடுக்க வேண்டும் என்பதே எங்கள் ஆவல். பிரீம் தொகை எப்படி அரசாங்கம் மக்களிடம் நேரடியாக கொண்டு செல்கிறதோ. அதே போன்று இதையும் கொண்டு சென்றால் நடப்பு அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். முன்னால் தலைவர் துன் மகாதீர் (இந்து) மதத்திற்கு செய்த பல நல்ல திட்டங்கள் யாவும் அதன் தலைவர்கள் அவர்களின் பினாமிகளுக்கு சென்று அடைந்ததினால் மக்கள் நடப்பு அரசாங்கம் மீது இன்றும் நம்பிக்கை இல்லாமல் இருகின்றனர். அரசாங்கம் (இந்து) மக்களுக்கு நிறைய செய்து இருப்பினும் அதை ஏழை எளிய மக்கள் பயன் அடைய வில்லை என்பதே உண்மை. எதிர்க்கட்சிகள் குறிப்பாக சிலாங்கூர் மாநிலம் நிறைய மக்களுக்காக சேவைகள் செய்து வருகின்றன. அவைகள் யாவும் நேரடியாக மக்களிடம் சென்று அடைகின்றன. அதனால் அந்த மாநிலம் இன்றும் மக்களிடம் செல்வாக்கு பெற்று வருகின்றன. நாங்கள் எதிர்பர்ப்பது ஒரு நல்ல தலைவரை. அது நடப்பு தலைவரோ அல்லது எதிர்க்கட்சி தலைவரோ யாராக இருப்பினும் மக்களுக்கு சேவை என்ற மனப்பான்மை இருக்க வேண்டும் என்பதேயாகும். நன்றி