14-வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை, பிரதமர் நஜிப்பிடமே விட்டுவிடும்படி பாரிசான் நேசனல் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குக் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிஎன் மற்றும் அம்னோ தலைவராக அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்று அம்னோவின் பொருளாளர், டாக்டர் சாலே சைட் கெருவாக் தெரிவித்தார்.
“ஒரு வேட்பாளருக்காகப் பரப்புரை செய்வதற்கான நேரம் இதுவல்ல, அந்த யுகம் மாறிவிட்டது. எந்த வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, கட்சித் தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும்.
“கட்சியை நாம் பலப்படுத்த வேண்டும். எனவே, நமது தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் எந்த வேட்பாளருக்கும் நாம் ஆதரவளிக்க வேண்டும்,” என்று, இன்று கோத்தா பெலுட்டில் நடந்த சீனப்ப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.