14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பிஎன் வெற்றி பெற்றால், வாக்களித்தபடி மக்களுக்கு சாமான்கள் வாங்குவதற்கான பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கொடுக்கப்படும்.
இப்போது மக்கள் சாமான்கள் வாங்கும் போது ஒரு பிளாஸ்டிக் பைக்கு 20 சென் கொடுக்க வேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் கூட்டணி ஒரு பிளாஸ்டிக் பைக்கு 20 சென் கொடுக்க வேண்டிய தற்போதைய கட்டாயத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்று சிலாங்கூர் பிஎன் தகவல் பிரிவுத் தலைவர் சாட்டிம் டிமான் கூறுகிறார்.
இது பிஎன் தேர்தல் அறிக்கையின் ஓர் அங்கமாகும். பிஎன் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றினால், பிளாஸ்டிக் பைக்கு இனிமேல் கட்டணம் இல்லை. இது உங்களுக்கு வேண்டுமா என்று கோலலங்காட், சுங்கை பெலெக் பெர்மனா தோட்டத்தில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் சாட்டிம் கேட்டார்.
பிளாஸ்டிக் பைகளைச் சாப்பிடமுடியுமா?
அறுபதாண்டுகளாக மக்களுக்கு நீங்கள் வழங்கி வரும் ‘இலவச’ உயர் கல்வி, ‘இலவச’ வேலை வாய்ப்பு ‘இலவச’ மருத்துவ உதவி போதாதா? அப்புறம் எதற்கு இந்த இலவச ‘பிளாஸ்டிக்’ பைகளும் இலவச ‘ஹேம்பர்களும்?’
‘பிளாஸ்டிக்’ பைகளின் அரசியல் தெரியாதவர்களாக இருக்கிறீர்களே திரு முனுசாமி அவர்களே ? பிளாஸ்டிக் பையை நன்கு பயன்படுத்த பழகி விட்டுட்டா, குப்பைகள் அங்கங்கே வீசப்பட்டு , மண்ணில் இறங்கும் தண்ணீர்களை குறைத்து , மண்ணின் நீர் வளத்தை பாதிக்க செய்யலாம் ! தேங்கிய தண்ணீர்களில் டெங்குலெட்சுமி மலேரியா காயத்திரியை பெருகச்செய்து ஒட்டு போடாத மக்களை கடிக்க வைக்கலாம். அல்லது பிளாஸ்டிக்கை எரிக்க வைத்து காற்று மண்டலத்தை அசுத்த படுத்தலாம் . குறைந்தது பிளாஸ்திக் உற்பத்தியை நம் சொந்தக்காரர்களுக்கு திருப்பி விடலாம் ! அடுக்கி கொண்டே போகலாம் …