தேர்தல் காய்ச்சல் பரவி வரும் வேளையில்,, ஆயுதப் படைத் தலைவர் ராஜா முகம்மட் அபாண்டி ராஜா முகம்மட் நூர், ஆயுதப் படையினரும் போலீசும் அரசாங்கத்துக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் நன்றியுள்ளவர்களாகவும் விசுவாசமிக்கவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கோலாலும்பூரில் நேற்றிரவு போலீஸ் மற்றும் ஆயுதப் படையினரைச் சிறப்பிக்கும் ஒரு விருந்தில் பேசிய ராஜா அபாண்டி, ஆயுதப்படையினருக்கு நஜிப் எப்போதும் தனிக் கவனம் செலுத்தி வந்திருப்பதாகக் கூறினார்.
சிறந்த இராணுவத் தளவாடங்களை வழங்கியிருப்பதுடன் ஆயுதப் படைகளுக்காக அரசாங்கம் நிறைய செய்துள்ளது என்றார்.
வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க சிறப்புச் சேவைத் திட்டங்களை வழங்கியுள்ளது.
பணிஓய்வு பெற்ற ஆயுதப் படையினரையும் போலீஸ் அதிகாரிகளையும் அரசாங்கம் நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறது என்றார்.
“நமக்குக் கொடுக்கப்படும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு அமைதி காக்கும் படையினரான நாம் நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
“இதை நாட்டுக்கும் பிரதமர் தலைமையில் செயல்படும் அரசாங்கத்துக்கும் நம் பிளவுபடாத விசுவாசத்தைக் காண்பிப்பதன்வழி நாம் புலப்படுத்த வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
ஆமாம்டா– ஆமாம்சாமி போடா விட்டால் உன் பதவிக்கு ஆப்பு தான். இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் தான் நீயும் உன் ராணுவத்தினரும் காவலும் விசுவாசமாக இருக்க வேண்டும்.இதிலிருந்து தெரிகிறதே அப்பட்டமான கயவாளிகளிடம் தான் அதிகாரம் இருக்கிறது என்று.
ஊழலில்லாத அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருங்கள் என்று சொல்லத் தெரியவில்லையே தலைவருக்கு!