மே 9 பொது விடுமுறை, பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
பிமேன்: எவரும் சத்தம் போடாதிருந்தால் இந்தப் பொது விடுமுறை வந்திருக்காது.
சில அமைச்சர்களும் மற்றவர்களும் தேர்தல் ஆணையத்துக்கு வக்காலத்து வாங்கிப் பேசியதைப் பார்த்தால் பொது விடுமுறை கொடுக்கப்படாது என்றுதான் தோன்றியது.
இது கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும், வார நடுப்பகுதி என்கிறபோது எல்லை கடந்து வந்து வாக்களிப்போருக்கு சிரமமாகத்தான் இருக்கும்.
எலேன்: பிரதமருக்குத் தெரிந்து விட்டது. கண்டனங்களும் சாடல்களும் அவருக்கு உணர்த்தி விட்டன. இனி, அவரின் அடிப்பொடிகள் சும்மா இருப்பார்களா. மக்களின் நலன் கருதிச் செயல்படும் இவர் எவ்வளவு பெரிய மனிதர் என்று கூவத் தொடங்கலாம்.
ஹெங் மார்வின்: சிறுபிள்ளைத்தனமான முடிவு. இது பராமரிப்புப் பிரதமர் பயந்து விட்டார் என்பதக் காண்பிக்கிறது.
மே 10-இல் வாக்களிப்பை வைத்திருக்கலாம். மே 9-ஐ பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. இது வீண் விரயம். ஏற்கனவே மலேசியாவில் ஏகப்பட்ட விடுமுறைகள்.
ஹோம்சீக்: இது ஒரு சரிக்கட்டும் முயற்சி.
வெளிநாடுகளில் வேலை செய்யும் மலேசியர்கள் வாக்களிப்பதைத் தடுப்பதுதான் அவர்களின் முக்கிய நோக்கம். வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களில் பெரும்பகுதியினர் பிஎன்னுக்கு எதிர்ப்பாக உள்ளனர்.
காஜி பூத்தா: சோனையன் குடுமி சும்மா ஆடாது.
என்ன கெடுபிடி என்றாலும் பக்கத்தான் ஹரப்பான் ஆதரவாளர்கள் வாக்களிக்க வந்து விடுவார்கள் என்பது அவர்களுக்கு நல்லாவே தெரியும். ஆனால், பிஎன் ஆதரவாளர்கள் அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் வார-நடுவில் வாக்களிப்பை வைப்பது தங்களுக்கு எதிராகவே திரும்பி விட்டதை உணர்ந்து கொண்டார்கள்.
ஜிஜிஜிஜி: என்ன அசட்டுத்தனம். கால விரயம். பண விரயம். பேசாமல் சனிக்கிழமையே வாக்களிப்பை வைத்துக்கொள்ளக் கூடாதா?
கோல்டீ: மே 8ஆம் நாளையும் பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். வெளியூர்களில் வேலை செய்வோர் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்று வாக்களிப்பதற்கு வசதியாக இருக்கும்.
தந்தரிக்: வாக்களிக்கத் தகுதி உள்ளவர்களே, தயை செய்து திரும்பிச் சென்று வாக்களியுங்கள். நெருக்கடிமிக்க நேரமிது. இந்நேரத்தில் நம் வாக்குகள் நம் எதிரகாலத்தையும் நம் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மாற்றி அமைக்கும்.
நடப்பு அரசாங்கம் என்ன செய்தாவது ஆட்சியைத் தன்வசமே வைத்துக்கொள்ள உறுதி பூண்டிருப்பது தெரிந்த விசயமே. நாம் ஒன்றுபட்டால் அவர்களைத் தூக்கி எறிய முடியும். அதை இப்போதே செய்ய வேண்டும். தவறினால் எப்போதும் செய்ய முடியாது.
வாங்மலேசியா: கடும் போராட்டமும் அர்ப்பணிப்பும் தேவை. கேள்வி, உங்கள் நாட்டை நீங்கள் நேசிக்கிறீர்களா? மலேசியா வளமான வாழ்வை உருவாக்கிக் கொடுக்கும் நாடாக மாற வேண்டும் என்பதில் உங்களுக்கு உண்மையான அக்கறை இருக்கிறதா?
போக்குவரவுக்கு ரிம2,000 என்பது பலருக்குப் பெரும் பணமாக தோன்றலாம். ஆனால், ஐந்தாண்டுக்கு ஒருமுறை என்னும்போது ஆண்டுக்கு ரிம400, மாதக் கணக்கில் பார்த்தால் ரிம40க்கும் குறைவுதான்.
மலேசியர்களே, உங்களுக்கு அக்கறை உண்டு என்பதைக் காண்பியுங்கள். திரும்பி வந்து வாக்களியுங்கள்.
ஜெரார்ட் லூர்துசாமி: சிங்கப்பூரில் உள்ள வாக்காளர்கள் திரும்பி வந்து வாக்களிக்க நிதி திரட்டி உதவலாம். விமான, பேருந்து பயணச் சீட்டுகள் விற்று முடிந்து விட்டால் இரயிலை நாடுங்கள். கார்களைகூட பகிர்ந்து கொள்ளலாம்.