சிலாங்கூரில் பக்கத்தான் ஹரப்பான் இட ஒதுக்கீட்டுப் பேச்சுகள் தாமதப்படுவதற்கு சிரமமான இடங்களில் யாரும் போட்டியிட விரும்பாததுதான் காரணமாகும் என்கிறார் ஷா ஆலம் எம்பி காலிட் சமட்.
இரண்டு கூறுகள் பேச்சுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன -’நிச்சய வெற்றி இடங்கள்’, ‘நிச்சய தோல்வி இடங்கள்’
.
“எல்லாருமே ‘நிச்சயம் வெற்றி’ இடங்கள்தாம் வேண்டும் என்கிறார்கள். ‘நிச்சயம் தோல்வி’ இடங்களை யாரும் விரும்புவதில்லை.
“அதனால்தான் சிக்கல். ஒரு இடத்தை ஒரு கட்சிக்கு கொடுத்தால் வேண்டாம் என்கிறது. அது எந்த இடத்தை விரும்புகிறதோ அதைத்தான் எல்லாருமே கேட்கிறார்கள்”, என்று ஷா ஆலம் எம்பி அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.