மலாய் வாக்காளர்கள், டிஏபி தலைமையிலான தந்திரோபாயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தங்களின் கொள்கைகளையே மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறது டிஏபி, என்று மசீச பிரச்சாரக் குழுத் தலைவர் தி லியான் கேர் தெரிவித்துள்ளார்.
“மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெற, டிஏபி டாக்டர் மகாதிருடனும் முஹைதினுடனும் ஒத்துழைக்க தயாராகிவிட்டது, ஒருகாலத்தில் அவர்களை அதிகம் வெறுத்ததும் டிஏபிதான்,” என்று நேற்றிரவு ஒரு செராமாவில் பேசினார்.
டிஏபியின் வாக்குறுதிகளில் ஏமாந்துபோக வேண்டாம் என அவர் மலாய் வாக்காளர்களுக்கு அறிவுறுத்துனார்.
“சர்ச்சை ஏற்படுத்தி வரும் கடலடி சுரங்கப்பாதை திட்டம் பற்றி, மசீச பல கேள்விகளை எழுப்பியுள்ளது, ஆனால் முதலமைச்சர் லிம் குவான் எங் எதற்கும் பதில் சொல்ல விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.