பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியைக் கைப்பற்றினால் பினாங்கு பாலத்தில் எல்லா வாகனங்களுக்கும் சாலைக் கட்டணம் அகற்றப்படும் என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்.
“நீங்கள் பிஎன்னுக்கு வாக்களித்தால் மோட்டார் சைக்கிளுக்கு மட்டும் சாலைக் கட்டணம் அகற்றப்படும்.
“எங்களுக்கு வாக்களித்து நாங்கள் புத்ரா ஜெயாவில் ஆட்சி வந்தால் பினாங்கு பாலத்தில் சாலைக் கட்டணம் முற்றாக அகற்றப்படும்”, என பினாங்கின் பராமரிப்பு முதலமைச்சரான லிம் கூறினார்.
நேற்று பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், பிஎன்னுக்கு வாக்களித்தால் பினாங்கு பாலத்தில் மோட்டார் சைக்கிலுக்கான சாலைக் கட்டணத்தை அகற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இன்று லிம் அதற்கு இப்படி எதிர்வினை ஆற்றியுள்ளார்.
பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கையில் பினாங்கு பாலம் பற்றி எதுவும் கூறப்படவில்லை ஆனால், நெடுஞ்சாலை டோல் கட்டண வசூலிப்பை அரசாங்கமே எடுத்துக்கொள்ளும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.