மக்கள் உங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்: இசிக்கு அன்வார் எச்சரிக்கை

பிகேஆர்    தலைவர்  அன்வார்   இப்ராகிம்    தேர்தல்  ஆணைய(இசி)த்தின்  ஒவ்வொரு   நகர்ச்சியையும்  மக்கள்  உன்னிப்பாகக்  கவனித்துக்  கொண்டிருப்பதாக   எச்சரித்திருக்கிறார்.

அண்மையில்  இசி    எடுத்த  பல   சர்ச்சைக்குரிய   முடிவுகளைக்  கண்ட  மக்களுக்கு    அது   சுயேச்சையான  ஓர்  அமைப்பாகத்தான்   செயல்படுகிறதா    என்ற  ஐயப்பாடு   எழுந்துள்ளது  எனச்  சிறைவாசம்    செய்துவரும்   முன்னாள்  எதிரணித்    தலைவர்   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

புதன்கிழமையை   வாக்களிப்பு  நாளாக   முடிவு  செய்தது  “வாக்காளர்கள்,  குறிப்பாக    தொலைதூரத்தில்    வேலை   செய்வோர்  வீடு   திரும்பி     வாக்களிப்பதைத்   தடுக்கும்  ஒரு  முயற்சி    என்பது    தெளிவு”  ,என்றாரவர்.

“இரண்டாவதாக  பரப்புரைக்கு   11  நாள்  என்பது   உலகிலேயே  மிகவும்  குறுகிய   காலமாகும்.  ஊடகங்களின்  துணையுடன்   அம்னோவும்  பிஎன்னும்  நீண்ட  காலமாக   பரப்புரை   செய்வதற்கு   அனுமதிக்கப்பட்டுள்ளது”.

இவ்வாண்டு  தொடக்கத்தில்     வாக்காளர்களாக   பதிந்து   கொண்டவர்களை   வாக்களிக்க     அனுமதிக்காதது   ஏன்  என்றும்    அன்வார்  வினவினார்.