பகான் நாடாளுமன்ற தொகுதியில் அரைக்கால் சட்டை அணிந்து கொண்டு வாக்களிக்க வந்த வாக்காளர் ஒருவரை இசி அதிகாரி வாக்களிப்பு நிலையத்திற்குள் செல்லவிடாமல் தடுத்தார். அந்த அதிகாரியை பினாங்கு பராமரிப்பு முதலமைச்சர் லிம் குவான் எங் சாடினார்.
அந்த அதிகாரி வாக்களிக்க வந்த ஒரு நடுத்தர வயது வாக்காளரை வீட்டிற்குப் போய் உடையை மாற்றிக் கொண்டு வரும்படி கூறியதாக ஓரியன்டல் டெய்லியின் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அந்த வாக்காளர் இறுதியில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதாக அந்த டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய குவான் எங், சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியை மாற்றும்படி தாம் இசியிடம் புகார் செய்யப் போவதாக கூறினார்.