இசி தலைவர்: இசி முத்திரை குத்தப்படாத வாக்குச்சீட்டுகள் செல்லத்தக்கவையே

தேர்தல்      ஆணைய(இசி)த்    தலைவர்   முகம்மட்  ஹாஷிம்   அப்துல்லா,      இசி  முத்திரை  குத்தப்படாத   வாக்குச்சீட்டுகளும்   செல்லத்தக்கவையே   என்று   உறுதி  கூறினார்.

இதன்   தொடர்பில்   ஒரு  புகார்   வந்திருப்பதாக   தெரிவித்த   ஹஷிம்    அப்படிப்பட்ட    வாக்குச்சீட்டுகளை     ஏற்றுக்கொள்வது     குறித்து    முடிவு    செய்யும்     அதிகாரம்   வாக்களிப்பு  நிலைய    தேர்தல்    அதிகாரிக்கு  உண்டு  என்றார்.

“அங்கு  தேர்தல்   அதிகாரி   இருக்கிறார்.  வேட்பாளர்களின்  முகவர்களும்   எல்லாவற்றையும்    பார்த்துக்   கொண்டு   இருப்பார்கள்.  எனவே,  அவற்றை   ஏற்றுக்கொள்ளலாம்”,  என்றாரவர்.

ஆனால்,  வாக்களிப்பு  நேரம்   5மணிக்குமேல்   நீட்டிக்கப்படாது   என்றவர்   திட்டவட்டமாகக்  கூறினார்.