வாக்களிப்பு மாலை மணி 5க்கு முடிவுக்கு வந்தது; கூடுதல் நேரம் கிடையாது

 

14 ஆவது பொதுத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு மாலை மணி 5.00க்கு முடிவுக்கு வந்தது. வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஹசிம் அப்துல்லா நிராகரித்தார்.

வாக்களிக்கும் அறைக்குள் இல்லாதவர்களுக்கு வாக்களிப்பு மாலை மணி 5.00 க்கு மூடப்படும் என்று ஆர்டிஎம்1 நேர்காணல் ஒன்றில் அவர் கூறினார்.

வாக்களிப்பு முடிவுறும் நேரம் மாலை மணி 5.00 என்று கெஜெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்குப் பின்னர் வாக்களிக்கப்பட்டால் அது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். அதனால் சில தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றாரவர்.

இதன் அடிப்படையில்தான் வாக்களார்கள் முன்னதாகவே வந்து வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.