தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்:

மலேசியாகினியின் மாற்றுவழியின் வழி மீண்டும் இப்பகுதிக்குள் செல்ல முடிந்தது.

இரவு மணி 2.04: அம்னோவின் பிறப்பிடமான ஜோகூர், ஹரப்பானிடம் வீழ்ந்து விட்டதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியது.

ஹரப்பான் 29 இருக்கைகளை வென்றுள்ள வேளையில் பின் 16 இருக்கைகளையும் பாஸ் ஒன்றையும் வென்றுள்ளன. இன்னும் 10 இருக்கைகள் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், தற்போதைய நிலை ஹரப்பான் மாநில அரசை அமைக்க அனுமதிக்கிறது. ஜோகூர் சட்டமன்றம் 56 இருக்கைகளைக் கொண்டது.

இரவு மணி 1.50: அதிகாரப்பூர்வமான அறிவிப்பு – இது வரையில் 91 நாடாளுமன்ற இருக்கைகளுடன் ஹரப்பான் முன்னிலையில் இருக்கிறது, பிஎன் 67.

இசி தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா, ஹரப்பான் 91 நாடாளுமன்ற இருக்கைகளையும், பிஎன் 67 இருக்கைகளையும் பாஸ் 14 இருக்கைகளையும் பெற்றிருப்பதாக அறிவித்தார்.

சுயேட்சைகள் 3 இருக்கைகளையும், பார்டி சோலிடாரிட்டி தானா ஆயர்கு ஓர் இருக்கையையும் பெற்றிருப்பதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இரவு மணி 1.50: ஹரப்பான் நெகிரி செம்பிலானை கைப்பற்றி விட்டதாக இசி துணைத் தலைவர் ஓத்மான் மாமூட் அறிவித்தார். பிகேஆர் 20 இருக்கைகள், பிஎன் 16, பாஸ் 0 மற்றும் சுயேட்சை 0.

இரவு மணி 1.50: இசி தகவல்படி ஜோகூர் பராமரிப்பு மந்திரி பெசார் முகம்மட் காலெட் நோர்டின் பாசிர் கூடாங் நாடாளுமன்ற இருக்கை மற்றும் மாநில இருக்கை பெர்மாஸ்சில் தோல்வியுற்றார்.

ஹரப்பானின் ஹசான் கரிம் பாசி கூடாங்கிலும், மற்றொரு ஹரப்பான் வேட்பாளர் செ ஸக்காரியா முகம்ட் சாலே பெர்மாஸ் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஹரப்பானின் மாநில இருக்கைகளின் எண்ணிக்கை 26 க்கு உயர்ந்துள்ளது. மாநில அரசை அமைக்க அதற்கு இன்னும் மூன்று இருக்கைகள் தேவைப்படுகிறது.

நாளை காலையில் ஒரு செய்தியாளர் கூட்டம் நடத்தப்படும் என்று காலெட்டின் பத்திரிக்கை உதவியாளர் கூறினார்.

இரவு மணி 1.47: பிஎன் வியூகத் தொடர்புகள் இலாகா இயக்குனர் அப்துல் ரஹ்மான் டாலான் சாபா, செபாங்கார் நாடாளுமன்ற தோல்வியடைந்திருப்பதை ஒப்புக்கொண்டதோடு வெற்றியாளர் வார்சானின் அசிஸ் ஜாமானுக்கு வாழ்த்துக் கூறினார்.

இரவு மணி 1.45: பராமரிப்பு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் அமைச்சர் அஹமட் ஷாபெரி சீக் அவரது கெமமான் இருக்கையை பாசின் அலியாஸ் அப்துல் ஹமிட்டிடம் இழந்தார்.

இரவு மணி 1.43: நெகிரி செம்பிலான் ஹரப்பானிடம் வீழ்ந்துள்ளதை இசி உறுதிப்படுத்தியது. ஹரப்பான் 20 இருக்கைகள்; பிஎன் 16; பாஸ் 0.

இரவு மணி 1.30: அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் குறைந்த வாக்குகளுடன் மூன்றாவது தவணைக்கு ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இரவு மணி 1.20: இசியின் முடிவுகள்படி, ஜோகூரில் 22 இருக்கைகளுடன் ஹரப்பான் முன்நிலையில் இருக்கிறது. பிஎன் 12 இருக்கைகள். இன்னும் 22 இருக்கைகளின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இரவு மணி 1.10: இசி ஐந்து மாநிலங்களுக்கான அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவை அறிவித்தது, மற்றவை இன்னும் இல்லை

இசி தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா அறிவித்த கீழ்க்கண்ட ஐந்து மாரிலங்களுக்கான தேர்தல் முடிவுகள்:

பெர்லிஸ் – பிஎன் 10, பாஸ் 2, ஹரப்பான் 3; பகாங் – பிஎன் 22, பாஸ் 8, ஹரப்பான் 5; கிளந்தான் பிஎன் 7, பாஸ் 28, ஹரப்பான் 0; திரங்கானு – பிஎன் 8, பாஸ் 18, ஹரப்பான் 0; பினாங்கு பிஎன் 2, பாஸ் 1, ஹரப்பான் 25.

இரவு மணி 1.10: பிஎன் பகாங் மாநில அரசை அமைத்தது. 42 இருக்கைகளைக் கொண்ட சட்டமன்றத்தில் 24 இருக்கைகளுடன் சாதாரண பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

நிக் ஒமார் படுதோல்வி

நள்ளிரவு மணி 12.38: காலஞ்சென்ற பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட்டின் மகன் நிக் ஒமார் கிளந்தான் மாநில செம்பகா சட்டமன்றத்திற்கான போட்டியில் தோல்வியடைந்தார்.

அவருக்கு 2,418 வாக்குகளே கிடைத்தன. பாஸ் வேட்பாளர் 10,549 வாக்குகள் பெற்ற வேளையில் பிஎன் 7,075 வாக்குகளைப் பெற்றது.

இரவு மணி 9.14: மசீச தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற இருக்கையை இழந்தது. இது மசீச இழந்த மூன்றாரவது நாடாளுமன்ற இருக்கையாகும்.

மலேசியாகினியின் இச்செய்தி பகுதிக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.

இரவு மணி 9.12″ சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியை டாக்டர் ஜெயக்குமாரிடமிருந்து ஹரப்பான் வேட்பாளர் எஸ். கேசவன் கைப்பற்றினார்.

இரவு மணி 9.02: மசீச தலைவர் லியோ தியோங் லாய் அவரது பெந்தோங் நாடாளுமன்ற தொகுதியில் டிஎபியின் வோங் டெக்கிடம் தோல்வி கண்டார்.

இரவு மணி 8.45: பாண்டான் நாடாளுமன்ற தொகுதியில் ஐந்துமுனை போட்டியை எதிர்கொண்ட பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் வெற்றி பெற்றார்.

இரவு மணி 8.50: மஇகாவின் எம். சரவணன் அவரது தாப்பா தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.

இரவு மணி 8.50: ஹரப்பான் வேட்பாளர்கள் வோங் கா வோ மற்றும் எம். குலசேகரன் அவர்களின் நாடாளுமன்ற தொகுதிகளான ஈபோ திமோர் மற்றும் ஈப்போ பாரட் ஆகியவற்றை தக்கவைத்துக் கொண்டனர்.

இரவு மணி 8.50: இரண்டு துணை அமைச்சர்கள் ஜோகூரில் தோற்கடிக்கப்பட்டனர்.

பிரதமர் துறையின் துணை அமைச்சர் ரஸாலி இப்ராகிம் மற்றும் அனைத்துலக தொழில் மற்றும் தொழிற்துறை துணை அமைச்சர் ஹமி சமூரி ஆகிய இருவரும் மூவார் மற்ரும் லெடாங் தொகுதிகளில் தோற்கடிக்கப்பட்டனர்.

இரவு மணி 8.45: ரபிடா அசிஸின் முன்னாள் நாடாளுமன்ற தொகுதியை பிஎன் மாஸ்துரா முகமட் யா/ஸிட்டமிருந்து ஹரப்பாணின் அஹமட் தெர்மிஸி ரமலி கைப்பற்றினார்.

இரவு மணி 8.30: பாஸ் இரு மாநில சட்டமன்ற தொகுதிகளை வென்றுள்ளது – சிலாங்கூர், கோத்தா அங்கெரிக் மற்றும் பகாங், ஜெங்கா.

இரவு மணி 8.35: ஹரப்பான் வேட்பாளரும் அமனா தலைவருமான முகமட் சாபு கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.

இரவு மணி 8.30: தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற தொகுதியில் ஹரப்பான் வேட்பாளர் சாங் லீ காங் 10,198 வாக்குகள் வித்தியாசத்தின் மசீச வேட்பாளரைவிட முன்னிலையில் இருக்கிறார்.

இரவு மணி 8.27: ஷா அலாம் நாடாளுமன்ற ஹரப்பான் வேட்பாளர் காலிட் சாமாட் பிஎன் மற்றும் பாஸ் வேட்பாளர்களைத் தோற்கடித்து அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.

இரவு மணி 8.15: பத்து தொகுதியில் ஹரப்பான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் பி. பிரபாகரன் வெற்றி பெற்றதாக தியன் சுவா அறிவித்தார்.

இரவு மணி 8.10: லாபிஸ்சில் மசீச உதவித் தலைவர் தீ யோங் தோற்கடிக்கப்பட்டார். அத்தொகுதியை டிஎபியின் ஜோகூர் முன்னாள் தலைவர் பாங் ஹோக் லியோங்.

இரவு மணி 7.55: ஹரப்பான் வேட்பாளர் வோங் கா வோ, பிகேஆர், ஈப்போ திமோர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.

இரவு மணி 7.50: ஹரப்பானின் சேவியர் ஜெயக்குமார் கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியைக் கைப்பற்றினர்.

இரவு மணி 7.40: பேராக்கில் டிஎபியின் முதல் மூன்று வெற்றிகள்’

பாசிர் பின்ஜி, கெபாயாங் மற்றும் அஸ்தாகா ஆகிய சட்டமன்ற தொகுதிகளைத் தக்கவைத்துக் கொண்டது.

மாலை மணி 7.34: பிஎன் லியாங் டெக் மெங் ஜோகூர், சிம்பாங் ரெங்கம் மற்றும் ரோஸ்மான் இஸ்லி, லாபுவான் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

பிகேஆர் பத்து பஹாட்டை தற்காத்துக் கொண்டது. பிகேஆர் புதிய வேட்பாளர் ரஷிட் ஹாஸ்னோன்.

மிரியில், ஹரப்பான் 4,000க்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

மாலை மணீ 7.35: ஹரப்பானின் டாக்டர் மைக்கல் தியோ, பிகேஆர், முன்னில்சியில் இருக்கிறார்.

சிரம்பானில் அந்தோனி லோக் முன்னிலையில் இருக்கிறார். லோக் 5,266 வாக்குகள்; சோங் (மசீச) 3,332 வாக்குகள்; ஷாரிபுடின் (பாஸ்) 1,195 வாக்குகள்.

இரவு மணி 7.40: சரவாக் பிஎன் அமைச்சர்கள் வான் ஜுனாய்டி தவங்கு ஜாப்பார் மற்றும் ரஹானி அப்துல் ஹரிம் அவர்களின் நாடாளுமன்ற இருக்கைகளைத் தக்கவைத்துக் கொண்டனர்.

பிஎன் கனோவிட் இருக்கையையும் தக்கவைத்துக் கொண்டது.