பிஎன் கட்சிகளின் இரு தலைவர்களும் நான்கு துணை அமைச்சர்களும் தோற்கடிக்கப்பட்டனர்

 

இரவு மணி 9.45: பிஎன் பங்காளித்துவக் கட்சிகளான மசீச மற்றும் மஇகா ஆகிய இரண்டின் தலைவர்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

மசீசவின் தலைவர் லியோ தியோங் லாய் மற்றும் மஇகாவின் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் ஆகியோர் தோல்வி கண்டனர்.

கெராக்கான் தலைவர் மா சியு கியோங் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தெலுக் இந்தானில் அவரை எதிர்த்து நின்ற டிஎபியின் இஙா கோர் மிங் அவரைவிட 5,000 வாக்குகள் அதிகமாகப் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

மசீசவின் லியோவை டிஎபியின் வோங் டாக் பெந்தோங்கில் தோற்கடித்தார். மஇகாவின் சுப்ரமணியத்தை பிகேஆரின் எட்மண்ட் சந்தாரா சிகாமட்டில் தோற்கடித்தார்.

லியோவும் சுப்ரமணியமும் பராமரிப்பு அரசாங்கத்தில் முறையே போக்குவரத்து மற்றும் சுகாதார அமைச்சர்களாக இருந்தனர்.

தோற்கடிக்கப்பட்ட நான்கு துணை அமைச்சர்கள்: ரஸாலி இப்ராகிம் (மூவார்), சுவா டீ யோங் (லாபிஸ்), ஹமின் சமூரி (லெடாங்) மற்றும் நோகே கும்பெக் (மாஸ் காடிங்).