அம்னோ சாபா எம்பிகளை வளைத்துப்போட முயல்வதாக ஊகங்கள் பரவிவரும் வேளையில், பிரதமர் பதவிக்குப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள டாக்டர் மகாதிர் முகம்மட், அரசாங்கம் அமைப்பதற்கு பக்கத்தான் ஹரப்பானுக்கு அதிகமதிகமாக ஆதரவு கிடைத்து வருவதாகக் கூறினார்.
இன்று பெட்டாலிங் ஜெயா செய்தியாளர் கூட்டத்தில் ஹரப்பானிடம் 135 இடங்கள் இருப்பதாகக் கூறினார் மகாதிர்.
“ஹரப்பான் வென்ற 121 இடங்களுடன் வாரிசானின் இடங்களையும் சாபாவின் சிறிய கட்சிகளின் இடங்களையும் சேர்க்க வேண்டும். அப்போது 135 இடங்களாகும்”, என்றவர் கூறினார்.
இங்குதான் சிறிது இடிக்கிறது.
அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி 14வது பொதுத் தேர்தலில் ஹரப்பான் 113 இடங்களை வென்றுள்ளது. பார்டி வாரிசான் எட்டு இடங்களை. அப்படியிருக்க மகாதிர் 135 இடங்கள் என்று கூறுவது எப்படி?