டாக்டர் மகாதிர் முகம்மட், பேரரசர் தம்மை அரசாங்கத் தலைவராக நியமிப்பது ஓர் அவசரத் தேவையாகும் என்கிறார்.
தாம் பிரதமராவதை ஆதரிப்பதாக பக்கத்தான் ஹரப்பான் எம்பிகள் ஒரு பிரகடனத்தில் கையொப்பமிட்டுக் கொடுத்திருப்பதாக அவர் கூறினார். ஹரப்பான் கூட்டணி இன்று மாலை மணி 5-க்குள் தாம் பிரதமராக்கப்படுவதைக் காண விரும்புவதாக அவர் சொன்னார்.
“இப்போது அரசாங்கம் ஏதுமில்லை…..இடைக்கால அரசாங்கத்தின் ஆட்சி நேற்றிரவுடன் முடிவுக்கு வந்தது”, என்றாரவர்.
கூட்டரசு அரசமைப்பின்படி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு எம்பியைத்தான் பேரரசர் பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதை மகாதிர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் ஹரப்பான் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது ஐயந்திரிபற நிறுவப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் உறுதிசெய்யப்பட்ட முடிவுகளின்படி பிகேஆர் 104 இடங்களை வென்றது. அதன் தோழமைக் கட்சியான டிஏபி சாபா, சரவாக்கில் 9 இடங்களை வென்றது. ஆக மொத்தம் அதற்கு 113 இடங்கள்.
ஒரு கட்சி அரசாங்கம் அமைக்க 112 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். எனவே, பக்கத்தான் ஹரப்பானுக்கு இப்போதுள்ள இடங்களே போதும். ஆனாலும் மற்ற கட்சிகளையும் அதனுடன் இணைத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
இது என்ன சந்திர முகி அரண்மனையா ?