சற்றுமுன்னர், துன் டாக்டர் மகாதிர் முகமட் மலேசியாவின் ஏழாவது பிரதமராக யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் முஹம்மத் V அவர்களின் முன்னால் சத்தியப் பிரமாணம் செய்தார்.
இந்த வரலாற்றுப் பூர்வமான நிகழ்ச்சி, கோலாலம்பூர், இஸ்தானா நெகாராவில் இரவு 9.50 மணியளவில் நடைபெற்றது.
மகாதீருடன் அவரின் மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகம்மது அலி மற்றும் ஹராப்பான் உறுப்புக் கட்சியின் முன்னணி தலைவர்களும் இருந்தனர்.
நேற்று, 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் வெற்றியை அடுத்து, சற்று முன்னர் இப்பதவியேற்பு நடந்தது.
1981-ஆம் ஆண்டு, தனது 56 வயதில் மகாதிர் மலேசியாவின் நான்காவது பிரதமராகப் பதவியேற்றார்.
22 ஆண்டுகள் பிரதமராக இருந்த பிறகு, 2003-ல் அப்பதவியில் இருந்து விலகினார். பதினைந்து ஆண்டுகள் கழித்து, மீண்டும் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், உலகின் மூத்தப் பிரதமராகத் திகழ்கிறார்.