முகம்மட் அபாண்டி அலி நீண்டநாள் சட்டத்துறைத் தலைவராக இருக்க மாட்டார் என்பதை பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கோடி காட்டினார்.
இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய மகாதிர், ஏஜி சான்றுகளை மறைத்து வைத்தார் எனக் குற்றஞ்சாட்டினார்.
“சட்டத்துறைத் தலைவரைக் கவனிக்க வேண்டியுள்ளது. அவர் தலையில் அவரே மண்ணை வாரிக் கொட்டிக் கொண்டார்.
“தவறு நிகழ்ந்துள்ளதைக் காண்பிக்கும் சான்றுகளை மறைத்திருக்கிறார். அது சட்டப்படி குற்றம் ” , என்றார் மகாதிர்.
2016 ஜனவரியில், முன்னாள் பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்த ரிம2.6பில்லியன் குறித்து விளக்கமளித்த அபாண்டி, நஜிப் அப்துல் ரசாக் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று கூறினார்.
அனைத்துலக விசாரணையாளர்கள் அது 1எம்டிபி பணம் என்றார்கள். நஜிப், சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த “நன்கொடை” என்றார்.
இது முதல் அடி. இனி வரும் தொடர் அடி.