கெடா மந்திரி புசார் நியமிக்கப்பட்டு அவர் கெடா சுல்தான் சலேஹுடின் அல்மர்ஹும் சுல்தான் பாட்லி ஷா முன்னிலையில் பிற்பகல் மணி மூன்றுக்கு மந்திரி புசாராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யார் மந்திரி புசார் என்பது தெரியவில்லை.
அம்மாநிலத்தில் எந்தவொரு கட்சியும் சாதாரணப் பெரும்பான்மையைக்கூட பெறவில்லை. 36 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மை என்றால் 19 இடங்களையாவது பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், முக்ரிஸ் மகாதிர் தலைமையில் அங்கு போட்டியிட்ட பக்கத்தான் ஹரப்பான் 18 இடங்களைத்தான் வென்றது. பாஸுக்கு 15 இடங்கள். பாரிசான் நேசனல் மூன்று இடங்களை மட்டும் வென்றது. எனவே , கெடா மந்திரி புசார் யார் என்பது இன்னமும் மர்மமாக உள்ளது.
பெர்னாமா