சட்டத்துறை தலைவர் (ஏஜி) முகமட் அபாண்ட் அலி அப்பதவியில் தொடர்வது ஏற்றுக்கொள்ளக்கத்தக்கதாக இல்லாததால் அவர் பதவி விலக வேண்டும் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
நாட்டில் இப்போது ஏஜி இல்லை என்று பிரதமர் கூறியிருக்கிறார். அது ஏஜி மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது.
அவர் தொடர்ந்து அப்பதவியில் இருப்பது கடினமானதாகும் என்றாரவர்.
பிரதமருக்கு ஆலோசனை கூறுவது சட்டக் கடமையாகும் என்பதோடு அவர் அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட வேண்டும். அவர் பிரதமருக்கு ஆலோசனை கூற முடியாது, ஏனென்றால் அவர் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று பிரதமர் கூறிவிட்டார்.
இந்தச் சூழ்நிலையில், அவர் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என்று கோபிந்த மேலும் கூறினார்.