முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அவரது நிருவாகத்தைக் கவிழ்க்கச் சதி செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு நாட்டின் எதிரியாகக் கருதப்பட்ட சரவாக் ரிப்போர்ட்டின் ஆசிரியர் கிளேர் ரியுகாசல்-பிரவுன் இப்போது நாட்டிற்குள் வருவதற்கான சுதந்திரம் பெற்றுள்ளார்.
பிரச்சனை இன்றி வந்து சேர்ந்தேன். எனது இருதயம் சற்று தயங்கியது. ஆனால், குடிநுழைவுத்துறையில் அனைவரும் நல்லவிதமாக நடந்து கொண்டனர். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. பிரமாதம் என்று அவர் கேஎல்எ விமான நிலையம் வந்தடைந்ததும் மலேசியாகினியிடம் கூறினார்.
கடந்த 2015 ஆகஸ்டில், தண்டனைக்குரிய சட்டத் தொகுப்பு (பீனல் கோட்) செக்சன் 124B மற்றும் 124I ஆகியவற்றின் கீழ் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு தீமை விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரைக் கைது செய்ய புக்கிட் அமான் கைது ஆணை பிறப்பித்திருந்தது.
இப்போது தமது சொந்த விவகாரங்களைக் கவனிப்பதற்காக இங்கு வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.