எம்எசிசி: நஜிப் விசாரணைக்காக அழைக்கப்பட்டார், கைது இல்லை

 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எஸ்ஆர்சி இன்டர்நேசனல் பற்றி கேள்விகள் கேட்கப்படுவதற்காக இன்று புத்ரா ஜெயாவுக்கு வரும்படி ஆணையிடப்பட்டார் என்று எம்எசிசியின் தலைமை ஆணையர் முகமட் ஷூகிரி அப்துல் கூறினார்.

“இன்று, நாங்கள் அவரிடமிருந்து தொடர்ந்து அவரின் வாக்குமூலத்தை 2015 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து எடுத்து வருகிறோம், ஏனென்றால் நாங்கள் கூடுதல் தகவல் பெற்றுள்ளோம்.

“(அவரைக்) கைது செய்வதற்கல்ல”, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.