துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான புதிய அரசாங்கத்தை, 1 டிரிலியன் நாட்டின் கடன் பற்றி விளக்கமளிக்குமாறு ம.சீ.ச. கேட்டுக்கொண்டது.
ம.சீ.ச. மகளிர் தலைவி, ஓங் சொங் ஸ்வேன், மகாதீர் குறிப்பிட்டுள்ள தொகை, பேங்க் நெகாரா அறிவித்த தொகைக்கு முரணாக உள்ளது என இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான் வெளியிடும் கடன் விகிதம் முக்கியமானது, அவர்கள் நாட்டின் கடனை உயர்த்தி சொன்னால், அது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைக்கும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.
“மே 22 வரை, நாட்டின் கடன் ரிம705.104 என பேங்க் நெகாரா தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், புதிய பிரதமர் ரிம 1 டிரிலியன் என்று கூறுகிறார். இந்த கடன் விகித முரண்பாடு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் அவர்.