துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பக்கத்தான் ஹரப்பான் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிப்பார்கள் என்று கூறினார்.
“அதுதான் எங்கள் வழி”, என்று மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான வான் அசிசா முதல்முறையாக அந்த அமைச்சுக்கு வருகை புரிந்தபோது நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
எவ்வளவு விரைவில் சொத்து விவரம் அறிவிக்கப்படும் என்று வினவியதற்கு, “அதை நிதி அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும்”, என்று பதிலளித்தார்.
மார்ச் மாதம் டிஏபி, நாடாளுமன்ற உறுப்பினர்களாகும் தன் கட்சியினர் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிப்பார்கள் என்று கூறியிருந்தது.