பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் உடன்பாடுகளில், 2016-இல் செய்துகொள்ளப்பட்ட மூன்றாண்டுகளில் 1.5மில்லியன் வங்காளதேசத் தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கான உடன்பாடும் ஒன்றாகும் என்பதை மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் உறுதிப்படுத்தினார்.
அந்நியத் தொழிலாளர்களை நம்பியிருக்கும் நிலையைக் குறைக்கும் புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கேற்ப அவ்வாறு செய்யப்படுவதாக குலசேகரன் கோலாலும்பூரில் கூறினார்.
“தேவைப்படும் இடங்களில் அந்நியத் தொழிலாளர்களை அனுமதிப்போம். ஆனால், முன்னுரிமை மலேசியத் தொழிலாளர்களுக்குத்தான். மலேசியர்களுக்குத்தான் முதலிடம். அடுத்த இடம்தான் மற்றவர்களுக்கு”, என்றாரவர்.
good