கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்குப் பின்னர் நஜிப் எம்எசிசி தலைமையகத்திலிருந்து வெளியேறினார்

 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்தை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் கழித்தார். அங்கு அவர் எஸ்ஆர்சி இன்டர்நேசனல் விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டார்.

மாலை மணி 4.45 க்கு வெளியே வந்த நஜிப், எஸ்ஆர்சியிலிருந்து ரிம42 மில்லியன் தமது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது குறித்த தமது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.

நான் என்னுடைய மிகச் சிறந்த திறமைக்கு ஏற்றவாறு அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன் என்றாரவர்.

எம்எசிசி அவர்களுடைய கடமையை தொழிலியப்படி செவ்வனே செய்து முடித்தனர். தமது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் பணி முற்றுப்பெற்று விட்டதாக அவர்கள் தம்மிடம் கூறியதாக நஜிப் தெரிவித்தார்.

எஸ்ஆர்சி இன்டர்நேசனல் செண்ட். பெர்ஹாட் சம்பந்தப்பட்ட நஜிப்பின் வாக்குமூலம் முதல்முறையாக மே 18 இல் எம்எசிசி தலைமையகத்தில் நடைபெற்றது.