பாஸ் உதவித் தலைவர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா, பக்கத்தான் ஹரப்பானில் உள்ள தங்களின் முன்னாள் தோழமைக் கட்சிகள் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றியதைக் கேட்காமல் கிடைத்த வரமாக நினைக்கிறார்.
நிறைய கடன்களைக் கொண்ட ஒரு நாடுதான் ஹரபானுக்குக் கிடைத்துள்ளது. கடன்களை அவர்கள் கட்டி முடிக்கட்டும். அதன் பிறகு பாஸ் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் என்றாரவர்.
“இப்போது எங்களால் மலேசியாவைக் கட்டி ஆள்வது முடியாத செயல். அவ்வளவு கடன் இருக்கிறது. அதை எப்படிக் கட்டி முடிப்பது?
“அந்தக் காரியத்தை அவர்கள்(ஹரப்பான்) செய்யட்டும். கடன்களைக் கட்டி முடித்ததும் ஐந்தாண்டுகளில் (அடுத்த பொதுத் தேர்தலில்) நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவோம்”, என யு டியுப் காணொளி ஒன்றில் முகம்மட் அமார் கூறினார்.